மாஸ்டர் படம் தீபாவளிக்கு வராமல் போனது தயாரிப்பு நிறுவனம் கூறிய அதிர்ச்சி உண்மை!

தளபதி விஜய் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிகொண்டே தான் போகிறது. மேலும் இப்படத்தின் டீசர் வெளியிட்டிற்காக தான் ரசிகர்கள் அனைவரும் அவளோடு உள்ளனர்.

இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தின் ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் “இந்தியாவில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் மாஸ்டர் படத்தை வெளியிட முடியாமல் போவதால் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடியவில்லை” என கூறப்பட்டுள்ளது.