நான் உயிரிழந்தால் என்னையும் எரிப்பார்கள்! நாடாளுமன்றத்தில் ரிஷாட் பதியுதீன் சீற்றம்

தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அப்பட்டமான பொய்களாகும் எனவும், இந்த நாட்டில் நீதி, நியாயம் இருந்தால் தான் நிச்சயம் விடுதலை செய்யப்படுவேன் எனவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காக நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வைத்திய கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் தொடர்பிலான விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் முஸ்லிம்கள் உயிரிழக்கும்பட்சத்தில் அவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி தரவேண்டும் எனவும், தான் உயிரிழந்தால்கூட தன்னையும் எரிக்கும் நிலை ஏற்படும் எனவும், ஆகவே இந்த தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் மீள்பரிசிலனை செய்யவேண்டும் எனவும் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.