திருகோணமலையில் கடைக்கு சென்ற மீன்வியாபாரி திடீர் மரணம்; தீவிர விசாரணையில் பொலிஸார்

திருகோணமலை மகாமாயபுர பகுதியில் 67 வயதான மீன் வியாபாரி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று மாலை அருகிலுள்ள கடைக்கு, வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கச் சென்றிருந்த நிலையில் கடைக்குச் சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து வீட்டிலுள்ளவர்கள் அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்ற போதும் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் மேலும் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவரை தேடியுள்ளனர்.

அத்துடன் இன்று காலை வீட்டிற்கு அருகிலுள்ள கடைக்குச் சென்று குறித்த நபர் பற்றி விசாரித்த போதும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

அதன் பின்னர், அப்பகுதியுள்ள புகையிரத நிலையம் அருகே அவரது தொலைபேசி சத்தத்தை கேட்ட ​​ஊழியர்களில் ஒருவர் , இவ்விடத்தில் ஒருவர் உயிரிழந்து கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருகோணமலை பொலிஸார் அவரது மரணத்திற்கான காரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.