கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் மேலும் 100 ஊழியர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை

கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் மேலும் 100 ஊழி யர்களுக்கு இன்று காலை பி.சி.ஆர் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

துறைமுக ஊழியர்களின் ஆரோக்கியத்திற்காகக் குறித்த பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் துறைமுக அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இருப்பினும், தொற்றுநோய் அபாயத்தை எதிர்கொண்டு கொழும்பு துறைமுகத்தின் நடவடிக்கைகள் சுகாதார வழி காட்டிகளைப் பின்பற்றி தொடர்ச்சியாகச் செயற்படும் என்றும் துறைமுக அதிகாரி அறிவித்துள்ளார்.