நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம் பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்திற் கொண்டு பாடசாலை மாணவர்களுக் காக புதிய தொலைக்காட்சி சேவை ஒன்றை ஆரம்பிக்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
தரம் 3 முதல் 13ஆம் தரம் வரையான பாடசாலை மாணவர் களுக்காக இந்த தொலைக்காட்சி சேவை ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளி லும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவுள்ளது.
அதற்கமைய அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி மற் றும் வானொலி சேவையின் உதவியுடன் இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த செயற்பாட்டுக்காகக் கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ள மை குறிப்பிடத்தக்கது.