மூன்றாம் தவணைக்கான பாடசாலை திறப்பது குறித்து ஜி.எல். பீரிஸ் தெரிவித்தது என்ன

மூன்றாம் தவணைக்காக அரச பாடசாலைகளை நவம்பர் 09 ஆம் திகதி மீண்டும் திறக்க முன்னர் தீர்மானம் மேற் கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிலையில், தற்போது திட்டமிட்டபடி மூன்றாவது தவணைக்காகப் பாடசாலைகள் எதிர்வரும் 9 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுமா என்பது குறித்து இந்த வார இறுதியில் தீர்மானம் எடுக்கப்படும் கல்வியமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

 

இந்நிலையில் நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா தொற்று அச்சம் காரணமாகப் பாடசாலைகள் ஆரம் பிப்பது குறித்து ஆழமான ஆய்வு மேற்கொண்ட பிறகு இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களின் ஆரோக்கியம் மிக முக்கிய மானது என ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

அத்துடன், தேவைப்பட்டால் இணையத்தளம் ஊடாக கற்பித்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.