தற்கொலை செய்துகொண்டவருக்கு கொரோனா

தற்கொலை செய்து கொண்ட இளைஞனிற்குகொரோனாபாதிப்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்கொலை செய்துகொணடவரின் பிரேதசப்பரிசோதனையின் போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனை மூலம் அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

 

27 வயதான இளைஞன் ஒருவரே இன்று காலை மரணமடைந்துள்ளார். இதன் மூலம் இலங்கையில் கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.