உலக சுகாதார அமைப்பின் தலைவருக்கு கொரோனா உறுதி

 

உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் அதோனாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதனை அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லாத போதும், பாசிட்டிவ் என முடிவு வந்ததுள்ளது.

இதனையடுத்து தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், வீட்டில் இருந்தே பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் ருவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.