வழிபாட்டில் ஈடுபட்ட பூசகர் உட்பட 15 பேர் கைது; வவுனியாவில் பொலிஸார் அதிரடி

வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் பழைய வாடி கிராமத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட பூசகர் உட்பட 15 நபர்களை நேற்று மதியம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

புளியங்குளம். பழைய வாடி கிராமத்திலுள்ள சிவநாகதம்பிரான் ஆலயத்தில் பௌர்ணமி தின விசேட பூசை வழிபாடுகள் நடைபெறுவதற்குரிய விசேட ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அங்கு சென்றபுளியங்குளம் பொலிஸார் சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாது வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர் எனத் தெரிவித்து பூசகர் உள்ளிட்ட 15 நபர்களைக் கைதுசெய்து புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை ஆலயத்தினுள் அனுமதிக்கவேண்டாம் என்று அப்பகுதி சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் ஆகியோரினால் அறிவித்தல் வழங்கப்பட்ட நிலையில் அதனை மீறிச் செயற்பட்டனர் என்று தெரிவித்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.