முல்லைத்தீவில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையை மூடும் படி உத்தரவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை நாளையதினம் இயங்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இருவர் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டதை அடுத்து குறித்த தொற்று இனம்காணப்பட்ட ஒருவருடைய மகள் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்ற நிலையில் அவருக்கான பி சிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது

அவருக்கான பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்றைய தினம் கிடைக்கிற பட்சத்தில் அவருக்கு தொற்று இல்லாத பட்சத்தில் ஆடைத்தொழிற்சாலையை இயங்க விட முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது

இருப்பினும் குறித்த யுவதிக்கான பி சிஆர் பரிசோதனை முடிவுகள் இன்றைய தினம் கிடைக்கப் பெறாத நிலையில் முடிவுகள் நாளைய தினமே கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் குறித்த ஆடைத் தொழிற்சாலையை நாளை இயங்ககூடாது என்று அறிவுறுத்தி உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்