கனடாவில் கத்திக் குத்து! இருவர் பலி – பலர் காயம்

கனடாவின் கியூபெக் நகரில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைதுசெய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.