தமிழின படுகொலையாளி சவேந்திர சில்வா கிளிநொச்சிக்கு விஜையம்- மக்கள் பேதியில்

இராணுவத் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று வடக்கு மாகாணத்திற்கு திடீரென விஜயம் செய்துள்ளார்.

இதன் போது கிளிநொச்சி – கிருஸ்ணபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற கொரோனா வைத்தியசாலைகளின் பணிகளை இன்று மாலை 4.30 மணியளவில் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

பின் கிளிநொச்சி மாவட்ட நிலைமைகள் தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர், சரவணபவனிம் கேட்டறிந்து கொண்டார்.

ஒன்றுக்கு மேற்பட்ட ஒப்பந்தகாரர்களைக் கொண்டு இன்னும் இரண்டுவார காலத்திற்குள் பணிகளை நிறைவு செய்து, கொரோனா வைத்தியசாலையின் செயற்பாடுகளை விரைவாக ஆரம்பிக்கும் வகையில் பணிகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.