கொழும்பில் உள்ள சீன தூதரகம் விடுத்துள்ள அறிவித்தல்

 

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களை இனம்காணும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வந்த பி சி ஆர் பரிசோதனைகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.இதற்கான காரணம் பி சி ஆர் இயந்திரங்கள் பழுதடைந்தமையே ஆகும்.

இந்த நிலையில் பழுதடைந்த இயந்திரங்களை திருத்தியமைக்கும் வகையில் சீனாவிலிருந்து தொழில்நுட்ப குழுவினர் வருகை தந்திருந்தனர்.

தற்போது பி சி ஆர் இயந்திரங்களை திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அவர்கள் எப்போது அவை செயற்படும் என்ற விபரத்தை கொழும்பிலுள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ளது.

“பி.சி.ஆர் சோதனை இயந்திர செயலிழப்பு 10 மணி நேர நடவடிக்கைக்கு பின்னர் கண்டறியப்பட்டது” என்று சீன தூதரகம் ட்வீட் செய்துள்ளதுடன் திங்கள் முதல் வழமை போன்று அது செயற்படும் எனவும் தெரிவித்துள்ளது.