யாழ் கரவெட்டிப் பகுதி முடக்கம் கொரோனா தொற்றுறுதியையடுத்து அறிவிப்பு

கரவெட்டி ராஜ கிராமம் பகுதியில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று அப்பகுதியைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவினை பொறுத்து குறித்த பகுதி இன்று இரவிலிருந்து முடக்கப்பட கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.

பேலியகொடை மீன் சந்தைக்கு மீன் ஏற்றி இறக்கும் கூலர் வாகன சாரதி நடத்துனர்கள் அப்பகுதியில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே முடக்கம் நடைமுறைப்படுத்தப்படலாம் எனவும் தெரிவித்தார்.