கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்த இருவர் திடீர் மரணம் – கொரோனா என அச்சம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இருவர் உயிரிழந்தனர்.உயிரிழந்த இருவருக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரே உயிரிழந்துள்ளனர்.
நோய் நிலைமை காரணமாக இந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் உள்ள சுகாதார நிலைமை காரணமாக உயிரிழந்த இருவரினதும் சடலங்களில் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இவர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்களா என இன்று பிற்பகல் அறிந்து கொள்ள முடியும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.