துமிந்த சில்வா விவகாரம்; விலகினார் மனோ கணேஷன்!

மரண தண்டனை கைதி துமிந்த சில்வாவுக்கு பாெது மன்னிப்பு வழங்கக் கோரி கையெழுத்திட்ட மனுவில் இருந்து விலகுவதாக மனோ கணேசன் எம்பி இன்று 29 சற்றுமுன் தெரிவித்துள்ளார்

மக்களினால் பெரும் அதிகாரம் பெற்ற தற்போதைய அரசு மிருசிவில் படுகொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற இராணுவ வீரர் சுனில் ரத்நாயக்கவுக்கு மன்னிப்பு வழங்கியது.

கடந்த ஆட்சியில் மைத்திரிபால சிறிசேன ரோயல் பார்க் கொலையில் மரண தண்டனை பெற்ற ஜயமஹாவுக்கு மன்னிப்பளித்தார்.

இந்தப் பின்னணியில் தமிழ் அரசியல் கைதிகளின் அவல நிலையை கருத்தில் கொண்ட துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு கோரும் மனுவில் கையெழுத்திட்டேன்.

துமிந்த சில்வாவின் மனுவில் கையெழுத்திட்டதற்காக நோக்கங்களை தமிழ் மக்களில் ஒருபகுதியினர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். எனவே அந்த மனுவில் இருந்து முழுமையாக விலகுகிறேன்” – என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.