அமெரிக்க இராஜாங்க செயலாளர் முன்-பகிரங்க பொய் கூறிய தினேஷ் குணவர்தன

இலங்கை பக்கச்சார்பற்ற அணிசேரா நாடு என்று வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவிற்கும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தற்போது இடம்பெற்றது.

வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலை அடுத்து இருவரும் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதன்போது பேசிய வெளிவிவகார அமைச்சர், அமெரிக்காவுடனும் ஏனையநாடுகளுடனும் இலங்கை உறவுகளை வளர்த்துக்கொள்ளும்என்று தெரிவித்ததுடன், இலங்கை பக்கச்சார்பற்ற அணிசேரா நாடு என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த சந்திப்புக்கு முன்னர் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.