நாளை முதல் சுவிச்சர்லாந்தில் அதிரடிச் சட்டங்கள்! உடன் நடைமுறைக்கு

சுவிஸ் கூட்டாட்சி அரசு நாளை புதன்கிழமை புதிய நடைமுறைகளை அறிவிக்கவுள்ளது.

நாட்டில் கொரோனா நுண்ணுயிர் பரவலைத் தடுக்க மேலும் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆலோசித்து வருகிறது.

  • சன நெருக்கமான பொது இடங்களிலும் முகக்கவசம் கட்டாயம் அணிதல்.
  • இரவு 22.00 மணியிலிருந்து காலை 06.00 மணிவரை ஊரடங்கு.
  • வணிக நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகை.
  • பொது நிகழ்வுகளில் ஆகக்கூடியது 50 பேர்.
  • தனிப்பட்ட நிகழ்வுகளில் 15 பேர் மட்டும்.
  • உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இணையவழி தொலைதூரக் கல்வி.
  • பொழுதுபோக்கு விளையாட்டு மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளில் புதிய வரையறைகள்.

போன்ற புதிய நடைமுறைகள் சுவிஸ் கூட்டாட்சி அரசின் சுகாதார அமைச்சினால் முன்மொழியப்பட்டுள்ளன.

ஆனாலும் சுவிசின் சில மாநில அரசுகள் இவற்றுள் சில நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் மேற்கூறிய விடயங்களில் முடிவுகள் எட்டப்பட்டு நாளை அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.