இலங்கையில் மைக்பொம்பியோ வெளியானது நிகழ்ச்சிநிரல்

அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ இன்றிரவு இலங்கையை வந்தடைந்தார்.

அவரது வருகையை அடுத்து அவரின் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி அவர் முதலில் ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்து கலந்துரையாடுவார்.பின்னர் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை அவரது வெளியுறவு அமைச்சில் சந்தித்து கலந்துரையாடுவார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இணைந்து ஊடக மாநாட்டில் கலந்து கொள்வார்.

அடுத்து உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கு இலக்கான கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்துக்கும் செல்லவுள்ளார்.

நாளையதினம் இரவு அவர் மலேசியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இதேவேளை தனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்கு நன்றி என அவர் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.