20 க்கு ஆதவாக வாக்களிக்க 600 மில்லியன் பேரம்பேசி ஏமாந்த எதிர்க்கட்சி எம்.பி

20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க 600 மில்லியன் ரூபா கேட்டு வாக்களித்த பின் ஏமாற்றம் அடைந்த எம்.பி ஒருவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மைய தினத்தில் நாடாளுமன்றத்தில் 20ஆவது திருத்தத்திற்கு குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் எதிராகவே வாக்களிக்க இருந்தார்.

எனினும் அமைச்சர்கள் இருவர் அவருடன் சமரச பேச்சு நடத்தியபோது குறித்த எம்.பி 600 மில்லியன் ரூபாவை கோரியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் வாக்களித்த பின் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் உறுப்பினர்களுக்கு பரீட்சயமான கழிவறை ஒன்றுக்கு வர கூறியுள்ளனர்.

குறித்த எம்.பியும் ஆதரவாக வாக்களித்து சொன்ன இடத்திற்கு போயுள்ளார்.

எனினும் சமரசம் பேசிய அமைச்சர்கள் வரவில்லை. இன்று வரை அந்த கொடுப்பனவு பற்றி குறித்த எம்.பி அந்த அமைச்சர்களிடம் நினைவுபடுத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.