ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 20இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்கும் கல்வி நிலையம் ஒன்றிற்கு அருகில் தற்கொலை குண்டுதாரியொருவர் திடீரென தன்னை வெடிக்க வைத்துள்ளார்.
வெடிப்புச் சம்பவத்தால் ஏற்பட்ட பாரிய அதிர்வினால் பலர் தூக்கி எறியப்பட்டதுடன், சுமார் 60 பேர் காயமடைந்துள்ளனர்.