நன்னீர் மீன்பிடியாளர்களின் நலன்கருதி ஒன்றரை இலட்சம் மீன்குஞ்சுகள் நேற்று கடநீரேரியில் விடப்பட்டன.

NAQDA, நிறுவனத்தினரால் வடமராட்சி கிழக்கு குடத்தனை அம்பன் நாகர்கோவில் மாமுனை குடாரப்பு நன்னீர் மீன் பிடியாளர்களின் நன்மை கருதி மூன்றாவது வருடமாக நேற்றும் ஒன்றரை இலட்சம் மீன் குஞ்சுகளை NAQDA நிறுவனம் அம்பனில் கடல் நீரேரியில் விட்டுள்ளனர்.
குடத்தனை, அம்பன், நாகர்கோவில் குடாரப்பு மாமுனை பகுதிகளிலுள்ள இருநூற்றுக்கும் மேற்பட்ட நன்னீர். மீன்பிடியாளர்களது நலன் கருதியே இன்று இந்த மீன் குஞ்சுகள் விடப்பட்டன. நன்னீர் மீனினங்கள் நீரேரியி்ல வளர்க்கப்பட்டு அவை சுமார் ஆறு மாதங்களின் பின்னர் பிடிக்கப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிட தக்கது.