யாழ் வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குடத்தனைப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் நீர்த்தாங்கி அமைப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்ற வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நபர் ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் அங்கு பணியாற்றுபவர்களுடன் தங்கியிருந்து பணியாற்றிவருவதாக தெரியவருகிறது.

அவருடைய சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றபோதிலும் அவருடைய உயிரிழப்பு கொலையா என்ற சந்தேகத்தில் பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருவதாக தெரியவருகிறது