தூக்கில் தொங்கி ஒருவர் மரணம். திட்டமிட்ட தற்கொலைக்கு தூண்டுதலா….?

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை சக்கரத்தையும் சேர்ந்த 47 வயதுடைய திவாகரன் என்பவர் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குடத்தனை பகுதிக்கான நீர்வழங்கும் நீர்த்தாங்கி அமைக்கும் பணியில் ஈடுபடஸடவரே  இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது  குறித்த நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குடத்தனை  பகுதிக்கு குடிநீர்  வழங்குவதற்கு நீர்தாங்கி அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டு அண்மையில் தனது வீட்டுக்கு சென்று பின்னர் நேற்று பணிக்கு திரும்பிய போது தாம் தங்கியிருந்த வீட்டில்  இருந்த வீட்டிலிருந்த நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபைக்கு சொந்தமான சில பொருட்கள் காணாமல் போயிருந்டாகவும், அது தொடர்பில் பருத்தித்துறை போலீசார் தற்கொலை செய்தவரை அழைத்து கடுமையாக அச்சுறுத்தி அவரது மனது மிக மோசமாக பாதிக்கப்படக்கூடிய வகையில் நடந்து கொண்டுள்ளமையாலேயே குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டிருக்காலாமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர்  இறுதியாக உறவினர் ஒருவருரிடம் தொலைபேசியில்  இன்று அதிகாலை பேசும் போது  நேற்று பருத்தித்துறை போலீசாரால் தன்னை கடுமையாக துன்புறுத்தி விசாரணைகள் மேற்கொண்டிருந்ததாகவும், இன்று  காலை ஒன்பது மணிக்கு தன்னை பருத்தித்துறை காவல் நிலையத்திற்க்கு வருமாறு அழைதிருந்ததாக கூறியதாகவும் காணாமல் போன பொருட்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் வேறு இரு நபர்களால் இதை பிரிந்திருக்கலாம் ஏன்றும் ஆனால் போலீஸ் தன்னை அச்சுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
காலை 6:00 மணிக்கு பருத்தித்துறை பொலிசிற்க்கு தகவல்கள் வழங்கியும் காலை 10:00 மணிவரை அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை. கிராம சேவகரும் இராணுவமுமே சம்பவ இடத்தில் பிறசன்னமாய் இருந்தனர். போலீசார் 10:15 மணிக்கே சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.