தப்பி சென்ற கொரோனா தொற்றாளர் பயணித்த இடங்கள்!

கொஸ்கமை பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட பின் அங்கிருந்து தப்பி சென்ற இளைஞர் சென்ற இடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொரளை-சஹஸ்புர வீட்டு வளாக 13வது மாடி வீட்டிலிருந்த போது குறித்த நபர் கண்டுபிடிக்கப்ட்டு மீண்டும் வைத்தியசாலையில் இன்று (23) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொற்றுறுதியான இளைஞர் கொஸ்கமை பொது வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்று அவிசாவளை பிரதான வீதியை வந்தடைந்துள்ளார்.

அதன் பின்னர் நெடுந்தூர பயணிகள் பேருந்து வாயிலாக ஒருகொடவத்தையை நோக்கி பயணித்துள்ளார்.

அங்கிருந்து தனது வீட்டுக்குச் சென்று அங்கிருந்த துவிச்சக்கர வண்டியினூடாக பொரெளை, சஹஸ்புரைக்குச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.