சற்று முன்னர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்!

அகலவத்தைய பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொரக்கொட, பேரகம, அகலவத்தை, தாபிலிகொட, கெக்குலந்தல வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலக பிரிவின் பெல்லன கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பகுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த அறிவித்தல் மீள் அறிவிப்பு வரை அமுலில் காணப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.