யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் ஒருவருக்கு கொரொனா!

யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

மினுவாங்கொட கொத்தணியிலிருந்து கொரோனா சந்தேகத்தின் பெயரில் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் ஒரு தொகுதி மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒரு தொகுதியினருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.கோப்பாய் கல்வியற் கல்லூரியை சூழு நெருக்கமாக மக்கள் வாழ்வதனால் குறித்த கொரொனா தொற்று ஏற்பட்டதன் பின்மக்கள் மத்தியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது