மறவன்புலோ விவசாயிகளுக்கான மானிய உர விநியோகம் இன்று ஆரம்பம்.

மறவன்புலோ கமக்கார அமைப்பிற்கு உட்பட்ட விவசாயிகளுக்கான மானிய உரவிநியோகம் இன்றைய  தினம் ஆரம்பமாகவுள்ளது
மறவன்புலோவில் புதிதாக அமையப்பெற்றுள்ள உர களஞ்சியத்திலிருந்து இன்று  ஆரம்பமாகும் உர விநியோகம்   தொடர்ச்சியாக நான்கு தினங்கள் நடைபெற இருக்கின்றது
மறவன்புலோ கமக்கார அமைப்பின் அலுவலகத்தில் உரத்திற்கான பதிவு செய்தோர் இன்றைய தினம் காலை 9.30  மணி முதல் தமக்கான உரத்தினை பெற்றுக் கொள்ள முடியும் என அமைப்பின் தலைவர் எஸ் திருஞானசம்பந்தர் அறிவித்துள்ளார்
பல தசாப்த காலங்களாக மறவன்புலோ விவசாயிகள் கைதடியில் அமையப்பெற்றுள்ள கமநல சேவைத் திணைக்களத்திலேயே தமக்கான உரத்தினை பெற்று வந்தனர் நீண்ட தூரம் பயணித்து அதிகளவான பணத்தைச் செலவழித்து தமக்கான உரத்தினை பெற்று வந்த விவசாயிகளுக்கு வரலாற்றில் முதல் தடவையாக மறவன்புலோ வில் புதிதாக அமையப்பெற்ற களஞ்சியத்திலிருந்து உரமானியம் விநியோகிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்