நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு ருவிற்றரில் பாலியல் மிரட்டல் விடுத்தவர் இலங்கையை சேர்ந்த இளைஞனா?

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு ருவிற்றரில் பாலியல் மிரட்டல் விடுத்தவர் இலங்கையை சேர்ந்த இளைஞன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்திய தமிழக சைபர் க்ரைம் பொலிசார், ருவிற்றரில் மிரட்டல் விடுத்தவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதை கண்டறிந்தனர்.

அவரை கைது செய்ய இன்டர்போலின் உதவியை நாடவுள்ளதாக தமிழக பொலிசார் தெரிவித்துள்ளனர்.முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறான 800 திரைப்படத்தில் நடிக்க கூடாதென விஜய் சேதுபதிக்கு எழுந்த கண்டனங்களுடன், குறித்த ருவிற்றர் மிரட்டலும் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.