தாக்கப்பட்ட விமல் வீரவன்ச?

பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கட்டகொட பேரினவாத அமைச்சர் விமல் வீரவன்சவை தாக்க முயன்றார் என தேசிய விடுதலை முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

20வது திருத்தம் குறித்த கருத்துவேறுபாடு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

20வது திருத்தத்தில் இரட்டை பிரஜாவுரிமை குறித்து காணப்படும் விடயம் குறித்து தனது கட்சியான தேசிய விடுதலை முன்னணி அதிருப்தி வெளியிட்டுள்ள போதிலும் தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க செய்வதற்கான முயற்சியில் ஜயந்த கட்டாகொட ஈடுபட்டார் என விமல்வீரவன்ச பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஜயந்தகட்டாகொட விமல்வீரவன்சவை தாக்க முயன்றுள்ளார்,இதனை ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்துநிறுத்தியுள்ளனர்.

விமல்வீரவன்சவின் கட்சிக்கு ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளமையும் ஜயந்தகட்டாகொட பசில் ராஜபக்சவின் விசுவாசி என்பதும் குறிப்பிடத்தக்கது.