சிப்பாய் ஒருவர் 11 வருடங்களின் பின் மரணம்!

இறுதி யுத்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த இராணுவச்சிப்பாய் ஒருவர், 11 வருடங்களின் பின்னர் நேற்று (21) உயிரிழந்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

2009 ஜனவரி மாதம் விசுவமடு பகுதியில் விடுதலைப் புலிகளின் எறிகணை தாக்குதலில் காயமடைந்த சிப்பாயே உயிரிழந்துள்ளார்.

58வது படையணியை சேர்ந்த, டான் திலான் பிரசன்னா என்பவரே உயிரிழந்தார். இவர் பதுளையை சேர்ந்தவர்.