கிளிநொச்சியில் 30 பேரின் பி.சீ.ஆர் முடிவுகள் வெளியாகின!

வட தமிழீழம் , கிளிநொச்சியில் தங்கியிருந்த 30 பேரினது மாதிரிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டதில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணை அதிகாரி தெரிவித்துள்ளார் தொழிலின் நிமித்தம் வருகை தந்து தங்கியுள்ள 30 பேருக்கே இவ்வாறு கடந்த திங்கட்கிழமை மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. குறித்த மாதிரிகளில் எவருக்கும் தொற்று இல்லை என அறிக்கை நேற்று 21ம் திகதி கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மேலும் ஒப்பந்த நிறுவனங்களில் இவ்வாறு வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தந்துள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்பிலான தகவல்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெளி மாவட்டங்களிலிருந்து கிளிநொச்சி மாவட்டத்தில் தங்கியுள்ள அனைவரும் தம்மை பற்றிய தகவல்களை சுகாதார சேவைகள் பணிமனைக்கு கிடைக்கக்கூடிய வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.