வவுனியாவில் இரண்டு டிப்பர்கள் மோதி விபத்து!

வவுனியா ஈரட்டை பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதவாச்சியில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்து கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் அதே திசையில் பயணித்த பிறிதொரு டிப்பர் வாகனம் பின்பக்கமாக மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக ஈரற்பெரிய குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.