வயிற்று கொழுப்பை வேகமாக கரைக்க வேண்டுமா? இதோ எளிமையான தீர்வு!

அன்றாடம் நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுகளில் இருந்தும் நம் உடலில் கலோரிகள் சேர்கிறது.

அதில் சரியாக எரிக்கப்படாத கலோரிகள் கொழுப்பாக மாறி உடல் பருமன் மற்றும் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுத்துகிறது.

எனவே உடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு எவ்வளவு அவசியமோ அதோபோல் உடல் உழைப்பும் மிக அவசியம்.

 

உடல் எடையை குறைக்கும் பொருள்?
  • ஒரு டம்ளர் பாலை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அது வெதுவெதுப்பானது அதில் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து தினமும் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.
நன்மைகள்
  • மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற தாது நம் உடலில் உள்ள கொழுப்பை கரைத்து தொப்பை வராமல் தடுக்கிறது.
  • மஞ்சள் கலந்த பால் நம் உடம்பில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து போராடி சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது.
  • மஞ்சளில் உள்ள மினரல்ஸ் நம் உடம்பில் உள்ள செல்களுக்கு ஊட்டம் அளித்து, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
  • வயிறு தொடர்பான கோளாறுகளை போக்கி, அல்சர், உணவு ஒவ்வாமை, உணவு செரிமானமின்மை ஆகிய பாதிப்புகளை நீக்குகிறது.
  • காய்ச்சல், தலைவலி, சளி, மூக்கடைப்பு மற்றும் தொண்டை வறட்சி போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது.
  • கை, கால் மூட்டுகளில் வீக்கம் மற்றும் வலி, முதுகு வலி போன்ற பிரச்சனை இருப்பவர்கள் மஞ்சள் பால் குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
  • நம் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கி, மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி, தூக்கமின்மை, மற்றும் அலர்ஜி போன்ற சருமப் பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது.
  • மஞ்சள் பாலில் உள்ள ஃபைட்டோஸ்ட்ரஜன் பெண்களின் மலட்டுத் தன்மையை போக்கி, வயதானவர்களுக்கு ஏற்படும் அல்சைமர் நோயை குணமாக்குகிறது.