மருத்துவமனையில் இருந்து தப்பிய இளம் விமானி கழுத்து துண்டாடப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!

ரஷ்யாவில் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் இருந்து தப்பிய இளம் விமானி, கழுத்து துண்டாடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து குறித்த விமானி, பிரமை பிடித்தவர் போன்று காணப்பட்டதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி மருத்துவமனையில் இருந்து மாயமான ஒரு வாரத்திற்கு பின்னரே அந்த 28 வயது விமானியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது…

போலார் விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், மருத்துவமனையில் இருந்து ஏன் மாயமானார் என்பது தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை.

மருத்துவமனையில் உள்ள இரும்பு வேலியை தாண்டும்போது காயம்பட்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தரப்பு கூறுகின்றனர்.

மருத்துவமனையில் இருந்து பல மைல் தொலைவில் உள்ள புதர் மண்டிய நிலத்தில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

கண்காணிப்பு கமெரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தியும், பொலிசார் இதுவரை குறித்த விமானியின் மரணம் தொடர்பில் ஒரு முடிவுக்கு எட்டவில்லை என்றே கூறப்படுகிறது.