இலங்கையில் நடத்தப்படும் பி.சி.ஆர் பரிசோதனை முற்றுமுழுதானா ஏமாற்று நடவடிக்கை!

இலங்கையில் நடத்தப்படும் பி.சி.ஆர் பரிசோதனை முற்றுமுழுதானா ஏமாற்று நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆய்வக சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ் இந்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

பி.சி.ஆர் பரிசோதனை என்பது இன்று மாபியாவாக உருவெடுத்த விட்டது என்றும் இதற்கு சுகாதார அமைச்சும் உடந்தை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடகமொன்றுக்கு நேற்று வழங்கிய நேர்காணலில் அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

அரசாங்கம் இன்று தொற்று சமூகத்தில் பரவிவிட்டது என்பதை கூற மறுப்பதாக சுட்டிக்காட்டிய அவர், பி.சி.ஆர் பரிசோதனையை நடத்த ஒரு முறையான சூத்திரம் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும் குறிப்பிட்டார்.