47 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

மினுவங்கொட கொத்தணியில் மேலும் 47 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 43 பேர் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும்

4 பேர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்றும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மினுவங்கொடை பிரெண்டிக்ஸ் கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,122ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 585 ஆக அதிகரித்துள்ளது.