நீரிறைக்கும் மோட்டார்களை குறிவைக்கும் கள்ளர்கள்

யாழ்.கொக்குவில் கிழக்குப் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்குள் 8 வீடுகளில் தண்ணீர் இறைக்கும் மின்சார மோட்டர்கள் களவு போயிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொக்குவில் சபாவதி ஒழுங்கை, பழைய தபால் கந்தோர் ஒழுங்கை, அச்சுக்கூட ஒழுங்கை, தலையாளி, போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளிலே இந்த திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் அந்த இடங்களிலேலே இருப்பதாகவும் இரவு நேரங்களில் நடமாடுவது சி.சி.ரி கமெராவில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் முறைப்பாடு செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்தப் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.