மருதங்கேணி பிரதேச மருத்துவமனையை கொரோணா மருத்துவமனையாக மாற்றத்தின் எதிரொலி. வெளி நோயாளர் பிரிவு உட்பட அனைத்தும் இரண்டு நாட்களாக செயலிழப்பு, மக்கள் கொந்தளிப்பு….!

மருதங்கேணி பிரதேச மருத்துவமனையை கொரோணா மருத்துவமனையாக மாற்றத்தின் எதிரொலி. வெளி நோயாளர் பிரிவு உட்பட அனைத்தும் இரண்டு நாட்களாக செயலிழப்பு, மக்கள் கொந்தளிப்பு, பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்மபலம், செல்வராசா கஜேந்திரன் நேற்று நேரடி விஜயம் மேற்கொண்டனர்.
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச மருத்துவ மனையை யாழ் மாவட்டத்திற்க்கான கொரோணா மருத்துவ மனையாக மாற்றப்பட்டுள்ளமையால் நேற்றுமுதல் தற்காலிக இடத்திற்க்கு மாற்றப்படும்வரை வெளிநோயாளர் பிரிவு, மற்றும, உள் நோயாளர பிரிவு என்பன முற்றுமுழுதாக செயலிழந்துள்ளது.
மருதங்கேணி பிரதேச மருத்துவ மனையின் உபகரணங்கள் பொருட்கள் அனைத்தும் பிறிதொரு இடத்திற்க்கு மாற்றப்பட்டுக் கொண்டுருக்கும் நிலையிலேயே சிகிச்சை வழங்குவது அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கின் பிரதான நகராக காணப்படுகின்ற மருதங்கேணியில் மருத்துவ மனை முன்பாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம்,பிரதேச சபை உப அலுவலகம், பொது நூலகம், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, வங்கிகள் இரண்டு, காவல் நிலையம்,அதிகளவன. வர்த்தக நிலையங்கள் உட்பட பல்வேறு செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்ற நிலையிலேயே கொரோணா மருத்துவமையாக மாற்றுவதை மக்கள் எதிர்த்து வருகின்றனர்,
கொரோணா மருத்துவ மனையாக மாற்றுவதை உடனடியாக நிறுத்தி வழமை போன,அறு தாம் சிகிச்சை பெறுவதற்க்கு ஏற்பாடுகளை செய்து தருமாறும் இல்லையேல் தாம் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாகவும் பிரதேச, சமூக மட்ட அமைப்புக்கள், அபிவிருத்திச்சபை, பொது மக்கள் ஆகியோர் இன்று பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரிடம் தெரிவித்தனர்
மேலும் அவர்கள் தெரிவித்ததாவது தமது மருத்துவ மனைக்கு பொறுப்பு மருத்துவ அதிகாரியும் மேலும் இரண்டு மருத்துவ அதிகாரிகளும், ஒரு பல் வைத்திய அதிகாரியும் பணியாற்ற வேண்டிய தமது மருத்துவ மனையில் ஓய்வு பெற்ற  வைத்திய அதிகாரி ஒருவரே மீள் நியமனம் பெற்று பணியாற்றி  வருவதாகவும், அவரால் ஆண் பெண் விடுதி மற்றும் மகப்பேற்று விடுதி என்பவற்றை தனி ஒருவராக கவனிக்க முடியாத நிலையில் பிற பிரதேச மருத்துவ மனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருவதாகவும், இதனால் பல வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் மக்கள் தெரிவித்ததுடன், யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமது பிரதேசம் தொடர்ந்தும் அரசு மற்றும் அதிகாரிகளால. புறக்கணிக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவு சங்கம், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம்,வடமராட்சி கிழக்கு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவ சங்கம் ஆகிய இடங்களுக்கு சென்று  அங்குள்ள குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்தனர்,