இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்புக்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம்

இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு இன்று சனிக்கிழமை காலை அளித்த நேர்காணலில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டிருக்கும் அவர், கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுபவர்கள் இளைஞர்களாக இருந்தால் உயிரிழப்புக்கள் நேரிடுவது சாத்தியமாகாது என்கிற போதிலும் வயோதிபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அவர்களுக்கு தொற்று ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் உயிரிழப்புக்கள் பதிவாகலாம் என்று குறிப்பிட்டார்.