119 கொரோனா நோயாளிகள் இல்லாதோர் தப்பியோட்டம்-என்ன சொல்கிறது பொலிஸ்

கொரோனா வைரஸ் நோயாளிகள் 119 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவலை பொலிஸார் முற்றாக மறுத்துள்ளனர்.

பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இது தொடர்பாக தெரிவிக்கையில்,

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா பரவத் தொடங்கிய பின்னர் அனைத்து ஊழியர்களின் விபரமும் பெறப்பட்டது.

அனைத்து ஊழியர்களின் தொலைபேசி இலக்கங்களும் பெறப்பட்டநிலையில் பின்னர் அவர்களை தொடர்பு கொண்டு கொரோனா வைரஸ் பரி சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 

தொழிற்சாலையின் அனைத்து ஊழியர்களுக்கும் பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஊழியர்களில் சிலரை காணவில்லை என்ற கூற்றில் எந்த உண்மையும் இல்லை என்று அவர் கூறினார்.

இந்த ஊழியர்களின் நெருங்கிய தொடர்புகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பு கொண்ட எவரும் முன்வந்து பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.