சூடுபிடிக்கும் றியாஜ் விடுதலை விவகாரம்: இரு சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு சட்டமா அதிபர் அழைப்பு

உயர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட றியாஜ் பதியூதீன் திடீரென விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் இரண்டு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு சட்டமா அதிபர் டப்புலா டி லிவேரா அழைப்பு விடுத்துள்ளார்.

சி.ஐ.டி.யின் பிரதிப் பொலிஸ் மா அதிபர், சி.ஐ.டி.யின் பிரதம விசாரணை அதிகாரி ஆகியோருக்கே சட்டமா நாளை திங்கட்கிழமை, றியாஜ் பதியூதீனை விடுதலை செய்தமைக்கான அனைத்து ஆவணங்களுடனும் வருமாறு உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான றியாஜ் உயர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக புத்தளத்தில் வைத்து ஏப்ரல் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். செப்டம்பர் 30 ஆம் திகதி அவர் விடுதலை செய்யப்பட்டது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியிந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் அவருக்குத் தொடர்பு இல்லை என்பது விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே அவர் விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால், அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு, விசாரணைகள் மீள நடத்தப்பட வேண்டும் என ஆளும் கட்சி எம்.பி.கள் 100 பேர் ஜனாதிபதி, பிரதமரிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்கள்.