கொரோனா நோயாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அம்புலன்ஸ் சாரதி கொரோனாவிற்கு பலி

கொரோனா பரவ ஆரம்பித்த பின்னர் புதுடில்லியில் நூற்றுக்கணக்கான கொரோனா வைரஸ் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த அம்புல்ஸ் சாரதி கொரோனா வைரசிற்கே பலியான சம்பவம் புதுடில்லியை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆரிவ்கான் என்ற அம்புலன்ஸ் சாரதி நூற்றுக்கணக்கான நோயாளிகளை மருத்துவமனை கொண்டு சென்றுள்ளதுடன் வைரசினால் உயிரிழந்த நூற்றுக்கணக்கானவர்களை இறுதிசடங்குகளுக்காக கொண்டு சென்றவர்.
புதுடில்லியில் இலவச அம்புலன்ஸ் சேவையை வழங்கும் அரசசார்பற்ற அமைப்பின் அம்புலன்ஸ் சாரதியாக அவர் பணியாற்றினார்


அம்புலன்ஸ் சாரதியாக அவர் சுயநலமற்ற விதத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி பலரின் அபிமானத்தை பெற்றிருந்தார்.

அவர் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த காலத்திலிருந்து தொடர்ச்சியாக பணியிலேயே இருந்தார் ஓய்வில் கூட வீட்டிற்கு செல்வதில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆரிவின் மறைவு பெரும் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது என குறிப்பிட்ட அரசசார்பற்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
அரீவ் மிகவும் அற்புதமான சேவையை வழங்கினார் என தெரிவித்துள்ள அரசசார்பற்ற அமைப்பு தான் எந்தநேரத்திலும் பணியாற்ற தயாராகயிருக்கவேண்டும் என்பதற்காக அவர் இங்கேயே எங்களுடன் வாழ்ந்தார் என தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் முதலாம் திகதி அவர் கொரோனா வைரஸ் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டார்,மருத்துவமனைக்கு சென்ற அவர் மீண்டும் பணியாற்ற வந்தார் எனினும் மீண்டும் வெள்ளிக்கிழமை நாங்கள் அவரை மருத்துவமனையி;ல் அனுமதித்தோம் அவர் சனிக்கிழமை உயிரிழந்தார் என அரசசார்பற்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
அவர் ஒரு உண்மையில் கொவிட்டிற்கு எதிரான யுத்த வீரர் எனவும் அந்த அரசசாhபற்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
அவர் 24 மணிநேரமும் பணியாற்றினார் அவரது இறப்பு ஏனைய அம்புலன்ஸ் சாரதிகளின் மனோநிலையை பாதித்துள்ளது என குறிப்பிட்ட அரசசார்பற்ற அமைப்பு தெரிவித்துள்ளது.