கனடாவில் கடந்த 8ஆம் திகதி காணாமல்போன தமிழ் பெண்! பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

கனடாவில் கடந்த எட்டாம் திகதி காணாமல்போன தமிழ் பெண் தொடர்பில் Toronto பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி குறித்த பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

கனடா – Toronto பகுதியில் வசிக்கும் ரோஜா ஸ்ரீதரன் எனும் குறித்த பெண் கடந்த எட்டாம் திகதி காணாமல் போயிருந்தார்.

இது தொடர்பில் பொலிஸார் வெளியிட்டிருந்த தகவலில் Warden Ave and Eglinton Ave E பகுதியில் அவர் இறுதியாக காணப்பட்டதாகவும், இதன்போது அவர் அணிந்திருந்த உடைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவரை கண்டுபிடிக்க உதவியவர்களுக்கு பொலிஸார் தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.