ஸ்ரீலங்காவில் நாளாந்தம் 38 பேரை கொல்லும் கொடிய நோய்

ஸ்ரீலங்காவில் நாளாந்தம் 64 இலங்கையர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் தினசரி 38 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர் என்றும் சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் ஜானகி விதானபத்திரண இது தொடர்பில் கூறுகையில்,

2008 முதல் ஸ்ரீலங்காவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. அத்துடன் புற்று நோயாளிகளில் 16 சதவீதம் பேர் வாய்வழி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புற்றுநோயிலிருந்து விடுபட ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களிலிருந்து விலக வேண்டும் என்று பொது மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், புற்று நோயாளிகளை அடையாளம் காண நாட்டின் அனைத்து முக்கிய மருத்துவமனைகளிலும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.