வடமராட்சிப் பகுதியில் திடீரென மயங்கிய குடும்பஸ்தர் பரணம் கதறும் குடும்பத்தினர்

வடமராட்சியில் கிணற்றடியில் முகம் கழுவச் சென்ற குடும்பத் தலைவர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொண்டமனாறுப் பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தொண்டமனாறு கடற்கரை வீதியில் வசிக்கும் முல்லைத்தீவைச் சேர்ந்த அன்ரன் ஜோர்ஜ் வயது-35 என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிணற்றடிக்குச் சென்ற அவர் மயங்கிச் சரிந்த நிலையில், அவரை உடனடியாக மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதும் அவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் மந்திகை வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.