லண்டனில் கொல்லப்பட்ட பொலிஸ்காரர் இளவரசி டயானாவின் மெய்பாதுகாப்பாளராக இருந்தவராம்!

லண்டனில் வெள்ளிக்கிழமை அதிகாலை , சிங்கள இளைஞரால் பொலிஸ் நிலையத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி, இளவரசி டயானாவின் முன் நாள் மெய்பாதுகாப்பாளர் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அவர் பிரித்தானிய மகாராணியின் அம்மாவின் பாதுகாப்பு ஊழியராகவும் கடமையாற்றி உள்ளதோடு, முன் நாள் பிரித்தானிய பிரதமராக இருந்த ஜோன் மேஜருக்கும் பாதுகாப்பு அதிகாரியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் இவ்வாறு பல உயர் பதவியில் இருந்த நபர், ஏன் இந்த தண்ணியில்லா காடு(குரைடன்) இடமாற்றம் செய்யப்பட வேண்டும் ?

முழு பிரித்தானியாவிலும் குற்றச் செயல்கள் அதிகம் இடம்பெறும் இடமாக கருதப்படும் குரைடனிற்கு ஏன் அவர் இடமாற்றப்பட்டார்.

பல உயர் பதவிகள் வகித்த ரட்டனா மட், எவ்வாறு சிறை பாதுகாப்பு அதிகாரியாக, தகுதி குறைக்கப்பட்டு குரைடன் அனுப்பப்பட்டார் ? அது போக 23 வயது சிங்கள இளைஞரை, பொலிசார் கைது செய்யும் வேளையில், அவர் தனது துப்பாக்கியை எடுத்து ஏன் சுடவில்லை ? காரில் இருந்த நேரம் கூட அவர் சுட்டிருக்க முடியும்.

அதன்பின்னர் அவர் பொலிஸ் நிலையம் சென்றபின்னர், பின் பக்கமாக கை விலங்கிட்டு இருந்த நிலையில் கூட, தனது துப்பாக்கியை எடுத்து ரட்னா மீது நெஞ்சை குறி வைத்து 5 தடவை சுட்டுள்ளார். அதுவும் அவர் தப்பிக்க சுடவில்லை. கொல்ல வேண்டும் என்றே சுட்டுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.

இவ்வாறு நடக்க என்ன காரணம் ? பொலிசார் எப்படி அந்த 23 வயது லூயிஸ் என்னும் சிங்கள இளைஞரை சோதனை செய்தும் அவரிடம் இருந்த துப்பாக்கியை கண்டு பிடிக்கவில்லை ? இது போன்ற பல கேள்விகள் எழுகிறது.

அது போக இளவரசி டயானா இறந்த பின்னர். அவர் சம்பந்தமான பல ஆதாரங்கள் மறைக்கப்பட்டது. அவரது வாகன ஓட்டுனர், இறந்துடன் அவரது உற்ற நண்பி, நண்பர்(டோடி அல்பயட்) இறந்தார்.

இந்நிலையில் தற்போது அவரது முன் நாள் மெய்பாதுகாப்பாளரான ரட்னாவும் இறந்துவிட்டார்.