தொற்று குறைவாக இருப்பதால் COVID-19 கட்டுப்பாடுகளை எளிதாக்க தயாராகும் விக்டோரியா மாநிலம்

அவுஸ்ரேலியாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியாயில் ஒருநாளைக்கு அடையாளம் காணப்படும் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 20 க்கும் குறைவாக காணப்படுகின்றன.

எனவே வைரஸ் தாக்கம் குறைவாக இருப்பதால் சமூக தொலைதூர கட்டுப்பாடுகளை தளர்த்துவது துரிதப்படுத்தும் என விக்டோரிய முதல்வர் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் 16 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு அதன் தலைநகரான மெல்போர்னில் கிட்டத்தட்ட 5 மில்லியன் குடியிருப்பாளர்களை ஓகஸ்ட் தொடக்கத்தில் இருந்து உலகின் மிகக் கடுமையான முடக்க கட்டுப்பாட்டுக்குள் உள்ளனர்.

ஓகஸ்ட் மாதத்தில் 700 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், மாநில முதல்வர் டேனியல் அண்ட்ரூஸ், இரவு ஊரடங்கு உத்தரவு உட்பட சில தடைகள் உடனடியாக அகற்றப்படும் என கூறினார்.

இருப்பினும் நவம்பர் இறுதி வரை பெரும்பாலான கட்டுப்பாடுகள் இருக்கும் என விக்டோரியா மாநிலம் முன்னர் அறிவித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அவுஸ்ரேலியாவில் இதுவரை 27,000 க்கும் அதிகமான தொற்றும் 872 இறப்புகளும் பதிவாகியுள்ளனமை குறிப்பிடத்தக்கது.