தேர்தலில் நியூசிலாந்து பிரதமரின் வெற்றி நிச்சயமாகின்றது – கருத்துக்கணிப்பு

அடுத்த மாதம் நியூசிலாந்தில் இடம்பெறவுள்ள தேர்தலில் வெற்றிபெற்று அதிகாரத்தை பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தக்க வைத்துக் கொள்வார் என கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு நியூஷப்-ரீட் ஆராய்ச்சி கருத்துக் கணிப்பு ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சிக்கு 50.1% ஆக ஆதரவைக் காட்டியது.

இருப்பினும் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் பதிவு செய்யப்பட்ட 60.9% பதிவை விட குறைவாகவே தற்போதைய கருத்துக்கணிப்பு காணப்படுகின்றது.

இதேவேளை பிரதான எதிர்க்கட்சியான தேசிய கட்சிக்கான ஆதரவு 4.5 சதவீத புள்ளிகள் அதிகரித்து 29.6% ஆக இருந்தது.

இந்நிலையில் கருத்துக் கணிப்பு முடிவுகள் எந்தவொரு கூட்டணியும் இல்லாமல் 40 வயதான ஆர்டெர்ன் ஆர்டெர்ன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார் என காட்டுகின்றது.

கடந்த மாதம் அக்லாந்தில் இரண்டாவது அலை வரும் வரை நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு கொரோனா தொற்று இல்லாமல் காணப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.