தேங்காய் தொடர்பில் ஆராய கருவியுடன் களமிறங்கும் அதிகாரிகள்

தேங்காய் விலை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பின்படி, தேங்காய்கள் விற்கப்படுகின்றதா என்பதை ஆராய விசேட கருவிகளுடன் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

வர்த்தமானி அறிவிப்பில், தேங்காய்களின் அளவின் பிரகாரம் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த அளவின் பிரகாரம் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை சரி பார்க்க விசேட கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் டி.எம்.எஸ். சேனநாயக்க இதனை தெரிவித்தார்.

13 அங்குலம் அல்லது அதற்கு மேற்பட்ட சுற்றளவு கொண்ட தேங்காயின் அதிகபட்ச விலை 70 ரூபாவாகவும், 12 முதல் 13 அங்குலத்திற்கு இடையிலான சுற்றளவு தேங்காயின் அதிகபட்ச விலை 65 ரூபாவகவும், 12 அங்குலத்தை விட குறைந்த சுற்றளவுடைய தேங்காய் 60 ரூபாவிற்கும் விற்கலாம் என வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.